ரஸய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஓரினச் சேர்கைக்கு எதிரான சட்டம் ஆதரவையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது: ஐரோப்பிய செய்தியாளர்:-
ஆண், பெண் இணைந்து வாழும் குடும்பங்களுக்குத் தரப்படும் சமூக சட்ட அந்தஸ்த்தும், உரிமைகளும், தம்பதிகளாக இணைந்து வாழும் ஓரினச் சேர்க்கையாளரிற்கும் ஜேர்மனியில் கிடைக்கவிருக்கும் சட்ட அமைப்பிற்கு, ஜேர்மனின் தலைவர் (Kanzlerin) Angela Merkel தடையாகவுள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
கடந்த ஜேர்மானிய அரசாங்கத்தில் வெளிவிவகார செயலராக கடமையாற்றிய Guido Westerwelle என்பவர், இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு, கருத்துத் தெரிவித்துள்ளார். இவர் என்பதும் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் ஆவார்.
தான் அரசாங்கத்தில் இருந்த காலத்தில், சாதாரன தம்பதிகளுக்குள்ள சகல சட்ட உரிமைகளும் ஓரினச் சேர்க்கையாளருக்கும் சமனாகக் கிடைத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கு மென்றும் கூறினார். சவூதி அரேபியாவில் ஓரினச் சேர்க்கையாளருக்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனைக் கெதிராகத் தான் குரல் கொடுத்தாகவும் கூறியுள்ளார்.
ரஸய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஓரினச் சேர்கைக்கு எதிரான சட்டம் ஆதரவையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது:
ரஸய ஜனாதிபதி Wladimir Putin ஆல் 30.06.13 இல் கைச்சாத்திடப்பட்ட ஓரினச் சேர்க்கையாளருக் கெதிரான சட்டம், ஆதரவையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்த அதே சமயம், ரஸ்யா இச்சட்ட அமுலாக்கல் மூலம் வழமைபோல் மனித உணர்வுகளுக்கும், உரிமைக்கும் தகுந்த இடமளிக்கத் தவறி விட்டதென ஜரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. Sotschi, இல் இடம்பெற விருக்கும் பனிக்கால விளையாட்டுக்களில் கலந்து கொள்வதிலும் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது.
இதற்குப் பதிலளித்த Wladimir Putin தவறான நவீன சிந்தனைகளை சுதந்திரமாய் உலக மயமாக்கி மனிதகுல இயல்பு வாழ்வைக் குலைக்க முயல்கிறது ஜரோப்பா எனக் குறிப்பிட்டுள்ளார்.
தம் பொருளாதார நலம் கருதிக் குடியேற்ற விதி முறைகளில் தடைகள் பல விதிக்க முயன்று கிழக்கு ஜரோப்பியர்களின் குடியேற்றத்தைத் தடுக்க எத்தனிப்பதிலும், அரசியல் தஞ்ச விண்ணப்ப தாரர்களை நாடுகடத்தும் செயலில் ஈடு படுவதிலுமாகச் செயற்படும் ஜரோப்பா, மனித வாழ்வியல் அழகைக் குலைக்க முயலும் ஓரினச் சேர்க்கை அநாகரீகத்தைத் தடுக்க முயலும் சட்ட நிர்ணயத்தை மனித உரிமைச் சீரழிவெனப் பேசுவது முறையற்ற தெனக் கூறியுள்ளார்.
மேலும் மனிதகுல சுதந்திரச் சிந்தனை வடிவங்களும், அதன் உரிமைகளும் காலத்தின் மாற்றத்தில் மாறுபடும் நிலையில், எது சரி எது தவறெனும் சர்ச்சை, உலகக் கிளர்ச்சிக்கு வித்திடாது, பேச்சு வார்த்தைகளில் முற்றுப் புள்ளி காணுமெனின் உத்தமமே எனவும் தெரிவித்தள்ளார்.
















