அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் ரொம்ப நாளாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.
சில நடிகர்கள் தங்களுக்கு தாங்களே அந்த படத்தை சூட்டிக்கொணடு வருவதும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சில மேல்தட்டு நாயகர்கள் அந்த பட்டத்தை தாங்கள் கைப்பற்றி விட வேண்டும் என்று தங்களை சுற்றியிருப்பவர்களை வைத்தே கோரசாக குரல் எழுப்பியும் வருகிறார்கள்.
அப்படி தளபதி நடிகர் தனது பட விழாக்களில் பெரிய பில்டப்பே கொடுத்து வந்தார். ஆனால் தலைவா சறுக்கலுக்கு பின்னர் ஜில்லாவில் நிமர்ந்துள்ளார்.
அதேசமயம், தல நடிகரோ, தொடர்ந்து கொடுத்த 2 ஹிட் படங்களால் தலைநிமிர்ந்து நிற்கிறார். இந்த சூழலை பயன்படுத்தி அவருக்கு அந்த பட்டத்தை சூட்டிவிட நினைக்கிறார்கள் அவரது அபிமானிகள்.
ஆனபோதும், நடிகர் தரப்பில் எந்த ரியாக்சனும் இல்லை. சூப்பர் நடிகர் களத்தில் நின்று கொண்டிருக்குபோதே அவரது பட்டத்துக்கு அடித்துக்கொண்டால் தவறாக நினைப்பாரோ? என்று தற்போதைக்கு தல அடக்கிவாசிப்பதாகவும் கூறப்படுகிறது.
















