பணம் சம்பாதிக்கும் ஆசையினால் ஓடிக்கொண்டே இருக்கும் இளைய தலைமுறையினர் தங்களின் சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கையினை இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வேளைப்பளுதான் மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் முக்கிய அம்சம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது30 முதல் 40 வயதிற்குட்பட்ட தம்பதியர்தான் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். திருமணமான புதிதில் சுவாரஸ்யமாக தொடங்கும் தாம்பத்ய வாழ்க்கை நாளடைவில் போர் அடிக்க ஆரம்பித்துவிடும்.
ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?´ என்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் பற்றியும், எந்தெந்த வயதில் என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்படும் என்பது பற்றியும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள், படியுங்களேன்.
30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சதவீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. இந்த வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இருக்கிறார்கள்.
கணவரும் நீண்ட நேரம் பணியில் ஈடுபடுவதோடு அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் தங்களின் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது´ என்று கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர்
தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேளைப்பளுவினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் பெண்கள் கூறியுள்ளனர்.
30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறார் இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர் ஷா.
















