இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி தந்த யாஷ் ராஜ் பிலிம்ஸ் பட நிறுவனம் முதல் முறையாக தமிழில் நேரடியாக(?) தயாரிக்கும் படம் – ஆஹா கல்யாணம்.
நான் ஈ நாயகன் நானி – வாணி கபூர் நடிக்கும் இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் கோகுல் கிருஷ்ணா.
விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக பணியாற்றியவர் இவர்.
கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில், வெளிவர இருக்கும் ‘ஆஹா கல்யாணம்’ திரைப்படத்தின் இசை வெளியீடு இந்த மாத 21ஆம் தேதி நடக்க உள்ளது.
அதற்கு முன்னோட்டமாக இந்தப் படத்தில் சூப்பர்ஹிட்டாகும் தகுதிபடைத்த ஒரு பாடலை மட்டும் சிங்கிள் ட்ராக்காக நேற்று மாலை 5 மணிக்கு ரேடியோ மிர்ச்சி வானொலியில் ஒலி பரப்பினர்.
‘தரனின் இசையில் உருவான அத்தனை பாடல்களும் ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் வெற்றிக்கு முன்னோடியாக இருக்கும்.
தங்களது அபிமான நடிகர்கள் மேல் உள்ள பேரன்பு கொண்ட ரசிகர்கள் எல்லோரும் ரசிக்கத்தக்க வகையில் மட்டுமின்றி, அவர்கள் ஒருமித்த குரலில் வரவேற்கும் பாடலாகவும் இருக்கும்.’ – என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர்.
பிரபல தமிழ் நடிகர்களின் பிரபலமான பன்ச் வசனங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இப்பாடலை பன்ச் பாடல் என அழைக்கலாம்.
சூப் பாடலை போலவே மதன் கார்க்கி இயற்றி உள்ள இந்த பன்ச் பாடலும் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட வாய்ப்பிருக்கிறது.
















