டான்ஸ் மாஸ்டருடன் ரகசியக் குடித்தனம்! மூன்றாவது திருமணத்துக்குத் தயாராகும் வனிதா விஜயகுமார்!

Robert-Vanitha-Vijayakumarசினிமாக்காரர்களின், குறிப்பாக நடிகர்கள், நடிகைகளின் காதல், மற்றும் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய வரும்போது கூலாக இப்படிச்சொல்வார்கள்…

‘நாங்க நல்ல ப்ரண்ட்ஸ்!’

இந்த வார்த்தைகளை இப்போது உதிர்த்திருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார்.

நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மகளான இவர் திருமணம் மற்றும் விவாகரத்து செய்வதில் கின்னஸ் சாதனையை நிகழ்த்தினாலும் ஆச்சர்யமில்லை.

பல வருடங்களுக்கு முன் டிவி நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் வனிதா விஜயகுமார்.

ஸ்ரீஹரி என்ற குழந்தைக்கு தாயான பிறகு, ஆகாஷுடன் பிரச்சனை ஏற்பட்டதால், அவரை விவாகரத்து செய்துவிட்டு ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

ஜெனிதா என்ற பிள்ளையைப் பெற்றார். பிறகு ஆனந்தராஜை விவாகரத்து செய்துவிட்டு, தன் மகனின் நலன் கருதி(?) மீண்டும் ஆகாஷ் உடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

இதற்கு ஆகாஷ் உடன்படாதநிலையில்…

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் கை கோர்த்துக் கொண்டு படு நெருக்கமாக பல இடங்களில் பவனி வந்தார் வனிதா விஜயகுமார்.

அண்மையில் நடைபெற்ற சினிமா நூற்றாண்டு விழாவிலும் வனிதாவும், ராபர்ட்டும் அன்னியோன்ய தம்பதியாய் காட்சி தந்தனர்.

அப்போதே இவர்கள் இருவரும் ரகசியக்குடித்தனம் நடத்தி வருவதாக அரசல் புரசலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட்டதாக ஒரு செய்தி…!

இது பற்றி வனிதாவிஜயகுமாரும், ராபர்ட்டும் இணைந்து மீடியாக்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளனர்..

”நாங்கள் அதிகாரபூர்வமாக இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் நட்பை இருவீட்டார்களுமே மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இருவரும் இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட இருக்கிறோம். விரைவில் அதுபற்றி அறிவிப்போம். திருமணம் செய்து கொள்ளும் திட்டமும் உண்டு. அதையும் பிறகு அறிவிப்போம்.”

என்ற அறிக்கையுடன் ‘இரண்டு நண்பர்களும்’ இணைந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோவையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அந்த ஃபோட்டோவை நல்லாப் பாருங்க…

‘நல்ல ப்ரண்ட்ஸ்’ எவ்வளவு நெருக்க்க்க்கமா இருக்காங்க பாருங்க..!

Tags: , ,

Leave a Reply