ஐ.நாவுக்கான தூதராக மீண்டும் தாமராவை நியமிக்க முயற்சி

un-flagஐ.நா மனித உரிமைகள் சபையின் அடுத்த கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகத் தாமரா குணநாயகம் மீண்டும் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

விரைவில் இந்த நியமனம் இடம்பெறவுள்ளதாக இலங்கை அரச வட்டாரங்களில் பேசப்படுவதாகக் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாமரா குணநாயகத்தை மீண்டும் ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிப்பது குறித்து அவருடன் பேச்சுக்களை நடத்து மாறும், தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஏற்கெனவே தமது அதிகாரிகள் சிலரைப் பணித்துள்ளார் என்று தெரியவருகிறது.

எனினும், ஜெனிவாவுக்கான தூதுவராக மீண்டும் நியமிக்கப்படுவதற்கு தாமரா குணநாயகம் இன்னமும் சாதகமான பதிலை வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஜெனிவாவுக்கான தூதுவராக உள்ள ரவிநாத் ஆரிய சிங்கவை அந்தப் பதவியை விட்டு விலகுவதற்குத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரச வட்டாரங்கள் கூறுகின்றன.

Tags: ,

Leave a Reply