மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்களால் விரும்பப் படும் எளிமையான பெண்மணி Michelle Obama

Michelle-ObamaBarack Obama தொலைந்து போன ஜரோப்பிய அமெரிக்க நட்புறவை தேடிப் புதிப்பிக்க முயல்கிறாரா?

அமெரிக்க முதற் பெண்மணியான Michelle Obama கடந்த வெள்ளிக் கிழமை (17.01.14) தன் ஜம்பதாவது பிறந்த தினத்தை வெள்ளை மாளிகையில் குதூகலமாகக் கொண்டாடினார்.

இவர் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் பற்றிய கலந்துரையாடல்கள் நடத்துவதிலும், சகலருக்கும் ஒரே மாதிரியான கல்வித்திட்டம் வேண்டுமெனும் கொள்கை பரப்புவதிலும், உடற் பயிற்சி பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுவதிலும் தன் முழு நேரத்தையும் செல விட்டு வருகிறார்.

மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்களால் விரும்பப் படும் எளிமையான பெண்மணி இவரெனக் கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. அதே கருத்துக் கணிப்பு Brack Obama 42 சதவீத மக்களால் ஏற்றுக் கொள்ளப் படுவதாகவும் கூறுகிறது.

ஜரோப்பிய அரசியல் வாதிகளின் தொலை பேசி உரையாடலை அமெரிக்கப் பாதுகாப்பு அலுவலகம் ஒட்டுக்கேட்ட விவகாரம் ஜரோப்பிய அரசியல் வட்டாரத்தில் இன்னும் மிகவும் சூடான வாதங்களைத் தாங்கி வருகையில், இனி வரும் காலங்களில் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அலுவலகம் வரையறையற்ற முறையில் தகவல்கள் சேகரிக்க இயலாமல் போகலாமென்றும், அமெரிக்காவிற்கு ஆபத்தெனக் கருதப்படாத நாடுகள் ஒட்டுக் கேட்கப் படாதெனவும் சென்ற வெள்ளிக் கிழமை Barack Obama தன் உரையில் குறிப்பிட்டமை ஜேர்மன் அரசியலில் புழுக்க நிலயை ஏற்படுத்தியுள்ளது.

இப் பேச்சு எவ்வகையிலும் போதுமான நல்லெண்ணத்தை ஜேர்மன் அமெரிக்க உறவில் ஏற்படுத்தாதெனவும், முறையான சட்ட ஒழுங்குகளுக்குள் உடன் படிக்கை கைச்சாத்திடப் படும் வரை, அமெரிக்கா இழந்த நம்பிக்கையை திரும்பப் பெற இயலாதெனவும் ஜேர்மன் நாட்டு நீதித் துறை செயலர் Heike Maas குறிப்பிட்டுள்ளார்.

தந்திரமான வார்த்தைப் பிரயோகங்களால் Barack Obama தொலைந்து போன ஜரோப்பிய அமெரிக்க நட்புறவை தேடிப் புதிப்பிக்க முயல்கிறாரா, அவர் பேச்சின் உள்ளடக்கத்தை அமெரிக்க Congress ம் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அலுவலகமும் நடை முறைப்படுத்த இணங்குமா எனும் கேள்விகள் ஜேர்மன் பத்திரிகைகளில் தொடுக்கப் பட்டும் உள்ளன.

Tags: ,

Leave a Reply