இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இனப்படுகொலையில் முறையான நீதி விசாரணை நடைபெறவில்லை என டெல்லியின் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், நேற்று (19) சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு கூறியதாவது,
இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இனப்படுகொலையில் முறையான நீதி விசாரணை நடைபெறவில்லை. இவ்விடயத்தை இந்தியா ஐ.நா. மன்றத்திற்கு எடுத்து செல்லவேண்டும்.
ஐ.நா. சர்வதேச நீதி விசாரணைக்குழு அமைக்கவும், ஐ.நா. அமைதிப்படையை அங்கு அனுப்பவும் இந்தியா வலியுறுத்தியிருக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவம் அடாவடித்தனம் செய்கிறது என்றார்.
















