இனத்தின் பெயரால் வாக்கு கேட்பது இனவாதம் அல்ல; மனோ கணேசன் தெரிவிப்பு

mano-ganeshan3இனத்தின் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்பது ஒருபோதும் இனவாதம் அல்ல என்று தெரிவித்திருக்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

“நமது இனத்து வாக்கு நமக்கு கிடைக்க வேண்டும் என்று கூறி, நமது மக்களின் வாக்கை நாம் கேட்டு வாங்கிக் கொள்வது ஒரு போதும் இனவாதம் இல்லை. இது எங்கள் இன உரிமை. இதை இனவாதம் என்று எவரும் சொல்வார்களேயானால், நான் சந்தோசமாக இனவாதி என்ற பட்டத்தை ஏற்றுகொள்கிறேன்” என்றார் அவர்.

ஜனநாயக மக்கள் முன்னணியின், மேல்மாகாண சபைத் தேர்தலுக்கான கொழும்பு மாவட்ட தேர்தல் பரப்புரையை மனோ கணேசன் நேற்று ஆரம்பித்து வைத்தார்.

புறக்கோட்டை பகுதியில் பரப்பு ரைத் துண்டுப் பிரசுர விநியோ கத்துக்காக கட்சி அணியினரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழர் ஐக்கியம், தமிழர் வாக்கு, தமிழர் பலம் என்ற எங்கள் முதன்மைக் கோ­த்தை தலை நகர தமிழ் பேசும் மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் என்று பரப்புரைக்குப் புறப்பட்டவர் களிடம் கேட்டுக்கொண்டார் மனோ.

“தலைநகரில் நாங்கள் பலமாக இல்லாவிட்டால் இங்கே எவரும் நம்மை கணக்கில் எடுக்கப்போவது இல்லை. இங்கே நாங்கள் பலமாக இருப்பது இங்கே வாழும் எங்களுக்கு மட்டும் அல்ல, மலையகத்திலும், வடக்கிலும், கிழக்கிலும் வாழும் எங்கள் உடன் பிறப்புகளுக்கும் அவசியத்தேவை என்பதை கொழும்புவாழ் தமி ழர்களுக்கு எடுத்துக்கூறுங்கள்” என்றார் அவர்.

தலைநகர் தமிழ் பேசும் மக்கள் எங்களுடன்தான் இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் ஆளுந்தரப்புக்கும், இந்த நாட்டு அரசியல் கட்சிகளுக்கும், உலகத்துக்கும் நிரூபித்துக் காட்டுவோம் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

“எங்கள் வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இங்கே எங்கள் வெற்றியை எங்கள் வடக்கு, கிழக்கு, மலையக உடன் பிறப்புகளுக்கும் எதிர்பார்த்து நிற்கிறார்கள்” என்றார் அவர்.

தமிழர் ஐக்கியம், தமிழர் வாக்கு, தமிழர் பலம் என்ற எங்கள் முதன்மைக் கோ­த்தை தலைநகர தமிழ் பேசும் மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் என்று பரப்புரைக்குப் புறப்பட்டவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Tags: ,

Leave a Reply