ஆஸியில் உள்ளவர்களை விடுதலை செய்யுங்கள்; தமிழக மாணவர்கள் மனு கையளிப்பு

chennai-studentsஅவுஸ்திரேலியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 46 பேரையும் விடுதலை செய்வதுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பாதவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆஸ்திரேலியா தூதரகத்திற்கு தமிழக மாணவர்கள் மனு ஒன்றினைக் கையளித்துள்ளனர்.

அதன்படி அவுஸ்திரேலியா அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்பியதால், நாட்டில் பலர் துன்பத்திற்கு உள்ளாகி இறந்துள்ளனர்.

ஆகவே அவுஸ்திரேலியாவில் உள்ள 46 தமிழ் அகதிகளையும் அங்கிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பாமல் தடுத்து அவர்களின்உயிர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் 46 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

அதன்படி மனுவை பெற்றுக் கொண்ட தூதரக அதிகாரி உடனடியாக ஆஸ்திரேலிய அரசுக்கு எடுத்துக் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த காலங்களில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் பிரச்சணைகளுக்காக தமிழக முதல்வரை அணுகினால் பின்பு அவர் இந்திய அரசுக்கு கடிதம் எழுதுவார் . அதன் பின் இந்திய அரசு சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுக்கு கடிதங்களை அனுப்பும்.

எனினும் தற்போது அவ்வாறு இல்லை தமிழ் மாணவர்கள் விழித்துக் கொண்டுள்ளனர். நேரடியாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்திற்கு சென்று தூதுவரை சந்தித்து எங்கள் உறவுகளை காப்பாற்றுக என கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இது நல்ல ஒரு முன்னேற்றம். தமிழர்கள் தாங்கள் ஒரு தேசிய இனம் என்பதை தங்களுக்குள் உறுதி செய்யும் வகையில் இப்போது உலகில் தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கின்றனர்.

எனவே இப்போது தமிழக மாணவர்கள் நல்ல ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply