‘ஈழப் பயணத்தை ஆரம்பித்து புலி என்பதை விக்கினேஸ்வரன் நிரூபித்துள்ளார் – குண­தாச அமரசேகர

gunadasa-amarasekara2நீதித்­து­றையில் இருக்கும் போது பசுத் தோல் போர்த்­திய ‘புலி­யாக’ செயற்­பட்ட விக்கி­னேஸ்­வரன் இன்று முத­ல­மைச்­ச­ரா­னதும் பசுத் ­தோலை வீசி­யெ­றிந்து விட்டு தான் பிரி­வி­னை­வாதப் புலி­யென்­பதை நிரூ­பித்துக் கொண்­டுள்ளார் என குற்றம் சாட்டும் தர்­ம­பால பரம்­பரா அமைப்பின் ஏற்­பாட்­டாளர் டாக்டர் குண­தாச அமரசேகர இல ங்கை சிங்­கள பௌத்த நாடல்ல என்ற கருத்தை வெளி­யிட்­டுள்ள விக்கி­னேஸ்­வரன் தனித்­தமிழ் ஈழத்­திற்­கான பய­ணத்தை ஆரம்­பித்து விட்டார் என்றும் அவர் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற இவ் அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அதன் ஏற்­பாட்­டா­ளரும் தேசப்­பற்­றுள்ள தேசிய அமைப்பின் தலை­வ­ரு­மான டாக்டர் குண­தாச அம­ர­சே­கர இங்கு மேலும் உரை­யாற்­று­கையில் இலங்கை சிங்­கள பௌத்த நாடல்ல. எனவே வர­லாற்றை புதி­தாக எழுத வேண்டும் என வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். இதற்கு இலங்­கையில் பிரி­வி­னை­வா­தத்தை ஏற்­ப­டுத்த முயற்­சி­களை மேற்­கொள்ளும் சர்­வ­தேச தேசிய அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் விக்கி­னேஸ்­வ­ர­னுக்கு உத­வி­பு­ரிய ஆரம்­பித்து விட்­டன என்றார்.

இதற்­காக இந்த நாடு சிங்­கள பௌத்த நாடல்ல பல்­லி­னங்கள் வாழும் நாடு என்ற வர­லாற்றை எழுத அரச சார்­பற்ற சக்­திகள் ஆரம்­பித்து விட்­டன.இது கால வரையும் ஈழ­ராஜ்­ஜி­யத்தை ஆத­ரித்­தவர் விக்­கினேஸ்­வரன்.அன்று நீதித்­து­றையில் இருக்கும் போது பசுத் தோல் போத்­திய புலி­யாக இருந்தார்.ஆனால் இன்று முத­லமைச்­ச­ரா­னதும் பசுத்­தோலை வீசி­யெ­றிந்­து­விட்டு தனது உண்­மை­யான புலி சுய­ரூ­பத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தோடு அதற்­கான திட்­டங்­க­ளையும் முன்­ன­கர்த்திக் கொண்­டி­ருக்­கிறார் எனவும் தெரிவித்தார்.

அசோக சக்­க­ர­வ­ரத்தி காலம் தொடக்கம் 2000 ஆண்­டு­க­ளையும் தாண்டி இலங்­கையில் பௌத்த தர்மம் உள்­ளது.இதனை மாற்றி எழுதி சிங்­கள பௌத்த கலா­சா­ரத்தை அழித்து எதிர்­கால சந்­த­தி­யி­னரின் மூளையை சலவை செய்து நாட்டை அழிக்கும் திட்டம் நடைபெறுகிறது.இது பிரபாகரனின் பயங்கரவாதத்தை விட பயங்கரமானது. எனவே இத்திட்டத்தை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றும் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply