நாட்டு மக்களை ஒடுக்குமுறைக்கு தள்ளுவதற்காக மகிந்த அரசாங்கம் ஹிட்லரின் ஆட்சிமுறைமையையே பின்பற்றி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி யின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கசினோ, போதைப் பொருள் வர்த்தகம் போன்ற சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை அணி திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வைக் கண்டிக்கும் வகையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஹைட் பார்க் மைதானத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி பாரியளவில் நடத்தப்பட உள்ளது.
நாட்டு மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















