இந்தியாவின் தொண்டி கடல் பகுதியில் ஒரு பைபர் படகு சில நாட்களாக மூழ்கிய நிலையில் மிதந்துள்ளது.
இதுகுறித்து, மரைன் பொலிஸார் மண்டபம் இந்திய கடலோர காவல்படையினருக்கு வழங்கய தகவலின் படி இந்திய கடலோர காவல்படையினர் மூழ்கிய படகை மீட்டு, மண்டபம் நிலைய கடல் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இப்படகில் சிங்கள எழுத்தும், ஐ.எம்.யூ.எல்.1418 எம்.டி.ஆர் என எண்களும் இருந்ததால் இவை இலங்கை படகாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை நடத்தும் ´கியூ´ பிரிவு பொலிஸார்,
கடலில் கவிழ்ந்து கிடந்த இலங்கை மாத்தரப்பகுதியை சேர்ந்த பைபர் படகை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகித்து விசாரித்து வருகிறோம் எனவும் படகிற்குள் மீன்பிடி வலைகளும் அழுகிய நிலையில் மீன்களும் காணப்பட்டன என்றும் தெரிவித்தனர்.
















