இந்தியா இலங்கைக்கு ரோந்து கப்பல்களையே வழங்கவுள்ளதாகவும் அது போர்க்கப்பல் இல்லை எனவும் இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவு அமைச்சின் உதவி செயலாளர் ஜோசி சத்திய கடதாசியை சென்னை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த கப்பல்கள் வழங்கப்பட்ட பின்னர் அவற்றை இந்திய கடற்பகுதிக்குள் ஒரு போதும் செலுத்தமாட்டோம் என்று இலங்கை கடற்படையும் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் போது இந்திய கடற்படையினரும் இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்காக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவர் என்று ஜோசி சுட்டிக்காட்டியுள்ளார்.
















