மன்னார் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனித புதைகுழியைப் போன்றே மற்றுமொரு மனித புதைகுழி மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மனித புதை குழி தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதேவேளை, கடந்த 20 ஆம் திகதி முதல் குறித்த புதைகுழி நேற்றுவரை 11ஆவது தடவையாக தோண்டப்படுவதுடன் இதுவரை 43 எலும்புக் கூடுகள் உள்ளிட்ட பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
எனினும் இன்றைய தினமும் தோண்டுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. மேலும் குறித்த விசாரணையினை சி.ஐ.டியினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















