இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும் இனப்படுகொலை தொடர்கிறது என்று ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உவிகளை வழங்கியதுடன் இலங்கைக்கு நட்பு நாடுகளாகவும் செயல்பட்டுள்ளன எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி நிரந்தர மக்கள் தீர்ப்பாய பொதுச் செயலாளர் கியன்னி டோக்னொனி இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டு வைத்தார்
மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில்,
இலங்கை இராணுவமும், காவல்துறையும் மக்களை துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமைகள் செய்தன அத்துடன் பெண்களுக்கு கட்டாய கருத்தடையும் செய்யப்படுகிறது.
இலங்கையில் போருக்கு பிறகும் இனப்படுகொலை தொடர்கிறது. இறுதி கட்டப் போரின்போது ஜனவரி முதல் மே மாதம் வரை பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டில் இருந்து தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அத்துடன் இலங்கையில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றதுடன் அவர்களது நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இலங்கையில் பல கட்டங்களாக இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளதுடன் போரின் போது இராணுவத்திற்கு இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஆயுத உதவிகளையும் செய்தனர் என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
















