ஜெனிவா சென்று அரசின் மனித உரிமை மீறல் குறித்து சுட்டிக்காட்டுவேன்; விக்ரமபாகு கருணாரட்ன

vikramaமார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தானும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்து கொள்ள உள்ளதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கூட்டத் தொடரில் கலந்து கொண்டு அரசாங்கம் மேற்கொண்டு வரும் ஜனநாயக விரோத மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்ட போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும் ஜெனிவா செல்ல தீர்மானித்துள்ளனர்.

இதன் காரணமாக நாங்கள் தனியான அணியாக கூட்டத் தொடரில் கலந்து கொள்வோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய செயற்படாமை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply