வருடத்திற்கு 58 முறை அது அவசியமாம்!

Sexual-Abuse11இந்தியாவில் ஆண்மை குறைபாட்டினால் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டிற்கு 58 முறை சராசரியாக உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறும் நிபுணர்கள் இந்த எண்ணிக்கை குறைந்தால் உடல்ரீதியாக அல்லது மனரீதியாக பிரச்சினை இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

மாறிவரும் உணவுப்பழக்கம்… பணிச்சூழலினால் ஏற்படும் மனஅழுத்தம்… புகை மது போதை வஸ்து பயன்படுத்துவதினாலும் இன்றைய இளம் தலைமுறையினர் ஆண்மை குறைபாட்டிற்கு ஆளாகின்றனர். இதனால் திருமணவாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு விவகாரத்து வரை தள்ளப்படுகின்றனர்.

செக்ஸ் தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அமைப்பான ‘ஆல்பா ஒன் ஆண்ட்ராலஜி குரூப்’ டெல்லியில் செயல்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் நடத்திய சர்வேயில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வறிக்கை தகவல்களை படியுங்களேன்

சர்வேயில் தெரியவந்த தகவல்கள் குறித்து ஆல்பா அமைப்பின் தலைவரும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணருமான அனூப் திர் மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் சி.எம்.பத்ரா ஆகியோர்இது குறித்து கூறியதாவது:

ஆண்மைக்குறைபாட்டினால் பாதிப்பு

ஆண்மை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 2,500 பேரிடம் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்டு பதில் பெறப்பட்டது. 40 வயதை கடந்தவர்களில் 50% பேரும், 40 வயதுக்கு கீழ் 10% பேரும் ஆண்மை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவாகரத்து ஏன் ஏற்படுகிறது

2500 பேரில் சராசரியாக 5ல் ஒருவர் விவாகரத்து ஆனவர். 10 பேரில் ஒருவர் பொதுவான உடல்நிலை பாதிப்பு காரணமாக டைவர்ஸ் பெற்றவராக உள்ளார்.

ஆண், பெண் இருவருக்கும் அதிக பொறுமை, முயற்சி, விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் மணவாழ்க்கை, தாம்பத்ய வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

Tags: , ,

Leave a Reply