இறப்பர் வளையங்களை மூக்கால் ஊதி வெடிக்க வைக்கும் நபர்

rubbermanசீனாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் இறப்பர் வளை­யங்­களை தனது மூக்கால் ஊதி வெடிக்க வைக்கும் அபூர்வ ஆற்­றலைப் பெற்று விளங்­கு­கிறார். தென் மேற்கு சிசுவான் மாகா­ணத்தைச் சேர்ந்த நியி யொங்பிங் (61 வயது) என்ற மேற்­படி நபர், டயர்கள் மீது 8 பேர் ஏறி நிற்க அவற்றை தனது மூக்கின் மூலம் காற்றை ஊதி பெரி­தாக்கும் ஆற்­றலைக் கொண்­டுள்ளார்.

வெதுப்­ப­க­மொன்றில் பணி­யாற்றி வரும் அவர், 8 வரு­டங்­க­ளுக்கு முன்னர் சீன மருத்­துவர் ஒரு­வ­ரிடம் தனது உடலில் ஏற்­பட்ட பாதிப்­பொன்­றுக்கு சிகிச்சை பெற சென்­ற­தை­ய­டுத்தே அவ­ருக்கு மேற்­படி அபூர்வ ஆற்றல் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

அவர் இறப்பர் வளை­ய­மொன்றை சுமார் 20 நிமிடங்களில் ஊதி பெரிதாக்குகிறார்.

Tags: ,

Leave a Reply