கேம் விளையாடிய போது வெடித்தது செல்போன்!

iphoneமத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டடம் பாக்லி கிராமத்தை சேர்ந்த சிறுவன் அர்யான் சிவாடே. அவன் தனது தந்தையின் செல்போனில் கேம் விளையாடியுள்ளான்.

அப்போது செல்போனில் சார்ஜ் ஏறியுள்ளது. இருந்தாலும் சிறுவன் கேம் விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக போன் வெடித்துவிட்டது. இதில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான். அவனது முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

அவனது கையை மருத்துவர்கள் பாதுகாத்துவிட்டனர். சிறுவனில் ஆள்காட்டி விரல் துண்டிக்கப்படாலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Tags: ,

Leave a Reply