நானும் சிம்புவும் பிரியணும்; அதுதானே உங்க ஆசை? : நிருபரிடம் எரிந்து விழுந்த ஹன்ஷிகா!

hansikaநயன்தாரா துரத்தியடித்ததும் சிம்பு அடைக்கலமான இடம் ஹன்ஷிகா. முதலில் அரசல் புரசலாக இருந்த இந்தக் காதலை இருவருமே கடைசியாக தங்களது ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரியப்படுத்தினார்கள்.

ஆனால் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல எப்போது சிம்புவுன் சொந்த பேனரிலேயே டைரக்டர் பாண்டிராஜ் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாராவை உள்ளே இறக்கினாரோ அப்போதே சிம்பு-ஹன்ஷிகா காதல் பிரேக் அப் ஆகி விட்டதாகச் சொன்னார்கள்.

ஆனால் காதலித்த புதிதில் தங்களது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட இருவரும் இப்போது அந்தக்காதல் தொடர்கிறதா என்ற கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லவில்லை.

ஹன்ஷிகாவும் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் இதைப்பற்றி மட்டும் ஒரு வார்த்தை எழுதுவதில்லை.

இதற்கிடையே சமீபத்தில் ஒரு நாளிதழின் நிருபர் சிம்புவுடனான காதலைப் பற்றிக் கேட்டபோது பொங்கியெழுந்து விட்டாராம் ஹன்ஷிகா.

“முதல்ல நீங்க எங்களை காதலிக்க விடுங்க.., அப்புறம் நான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்றேன். இந்த விஷயத்துல நாங்க அமைதியா இருக்கிறதே முதல்ல நீங்க எங்களைப் பத்தி மனசுக்கு வந்ததையெல்லாம் எழுதக்கூடாதுங்கிறதுனால தான். நாங்க பிரியணும்னு மீடியாக்கள் ஆசைப்படுதா..? எதை எப்போ எந்த நேரத்துல சொல்லணுமோ அப்போ கண்டிப்பா சொல்லுவேன்” என்றாராம்.

ஹன்ஷிகாவின் இந்த டென்ஷனான பதிலை சற்றும் எதிர்பாராத நிருபரோ கூல் மேடம் நிஜம் என்னன்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன் என்று சொல்லி சமாளித்தாராம்.

ஆனால் கடைசி வரைக்கும் சிம்பு உடனான காதலின் தற்போதைய கண்டிஷனைப் பற்றி மட்டும் வாய் திறக்கவில்லையாம் ஹன்ஷிகா.

Tags: , ,

Leave a Reply