கமலின் கனவை காலி பண்ணியது கமலின் பேராசையா?

kamal2- என்று நீங்களும் நினைக்க வாய்ப்பிருக்கிறது – இந்த செய்தியைப் படித்த பிறகு.

ஒரு கலைஞனாக கமல் பேராசைப்பட்ட விஷயங்கள் எல்லாம் திரைத்துறைக்கு நன்மையை விளைவித்திருக்கிறது.

அதே கமல், ஒரு வியாபாரியாக பேராசைப்பட்டபோது?

விஸ்வரூபம் படத்தை திரையரங்கில் வெளியிடும் அதே தினத்தில் டிடிஹெச் தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சியிலும் வெளியிட நினைத்தார் கமல்.

திரையரங்கு அதிபர்களின் எதிர்ப்பு காரணமாக கடைசிநேரத்தில் அத்திட்டம் கைவிடப்பட்டது. பைரஸியை ஒழிக்க மாற்றுவழியாக கமல் எண்ணிய டிடிஹெச் கனவு அப்போது நிறைவேறாமலே போனது.

கமலால் செய்ய முடியாத விஷயத்தை, தெலுங்கில் சாதித்துக் காட்டி இருக்கிறார் – அயோத்யாகுமார் கிருஷ்ணம் ஷெட்டி என்ற இயக்குநர்.

ஆஷிஷ் வித்யார்தி, சுஹாசினி நடித்த ‘மினுகுமன்னா மினுகுருலு’ என்ற தெலுங்குப்படம் நேற்று (24.01.2014) திரையரங்கிலும், ஏர்டெல் டிடிஹெச்சிலும் வெற்றிகரமாக வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமல்ல, திரையரங்கிலும், டிடிஹெச்சிலும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது – மினுகுமன்னா மினுகுருலு.

கமலஹாசனால் சாதிக்க முடியாததை அயோத்யாகுமார் கிருஷ்ணம் ஷெட்டி சாதித்தது எப்படி?

மினுகுமன்னா மினுகுருலு படத்தை தயாரித்து இயக்கிய இவர், கமலஹாசனைப்போல் பேராசைப்படவில்லை.

தியேட்டர்காரர்களிடம் நியாயமான விலைக்கு படத்தை விற்றவர், ஏர்டெல் டிடிஹெச்சுக்கும் நியாயமான விலைக்கே விற்றிருக்கிறார்.

அதனால் தியேட்டர்காரர்கள் இந்த முயற்சியை எதிர்க்கவில்லை. மாறாக ஆதரித்தனர்.

குறைந்த விலைக்கு படத்தை வாங்கியதால் டிடிஹெச்சில் படம் பார்க்க 100 ரூபாய் என மிகவும் குறைவான கட்டணத்தையே நிர்ணயித்தது ஏர்டெல் டிடிஹெச்.

கமலஹாசனோ விஸ்வரூபம் படத்தை டிடிஹெச்சில் பார்க்க 1000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்திருந்தார்.

டைம் இருந்தால்…மீண்டும் ஒரு தடவை தலைப்பைப் படிங்க…!

Tags: ,

Leave a Reply