குஜராத் மாநிலம் ஜாக்காவ் கடற்பகுதியில் சர்வதேச கடல் எல்லைக்கு அருகே 10 படகுகளில்52 இந்திய மீனவர்கள் மின் பிடித்துக்கொண்டிருந்தனர்.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக கூறி அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவர்களில் 9 படகுகள் மற்றும் 22 மீனவர்களை சிறைபிடித்தனர். ஒரு படகு மற்றும் 30 மீனவர்களை விடுவித்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி அவர்களின் குடும்பத்தினர் அம்மாநில அரசை கேட்டுக் கொண்டனர்.
மீன்பிடி காலம் கடந்த ஒகஸ்ட் 15 ஆம் திகதி முதல் இருந்து இதுவரை 4 முறை இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
















