ஜெனிவாவில் ஆதரவு தேட வியட்நாம் சென்றார் டியூ

duஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவை எதிர்ப்பதற்கான நடவடிக்கையில் முழு வீச்சில் களமிறங்கியுள்ள இலங்கை, அதற்குரிய நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக வியட்நா முக்குச் சென்றுள்ள அமைச்சர் டியூ குணசேகர, ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவளிக்கக் கோரியுள்ளார் என்று தெரிய வருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் சபை யில் வியட்நாமின் ஆதரவைக் கோருவதற்காக இலங்கை அரசு, அமைச்சர் டியூ.குணசேகரவை ஹனோய்க்கு அனுப்பியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் வின் சிறப்புத் தூதுவராக அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் டியூ குணசேகர வியட்நாம் அதிபர் ட்ரூங்ரான் சங்கின்னை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, வியட்நாமுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது குறித்து ஆராயப்பட்டுள்ள அதே வேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தைத் தோற்கடிக்க வியட்நாம் ஆதரவு தர வேண்டும் என்று அமைச்சர் டியூ. குணசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் தேசிய அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்கும் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று வியட்நாம் அதிபர் உறுதியளித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உறுப்பு நாடாக வியட்நாம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply