இந்தியாவின் 65வது குடியரசு தின விழா இன்று

india9நாட்டின் 65வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியாக அமர் ஜவான் ஜோதி நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அமர் ஜவான் ஜோதி நிகழ்ச்சி நாட்டிற்காக உயிர் நீத்த முன்னாள் இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.

அதைத்தொடர்ந்து ராஜ்பத்தில் மூவர்ண தேசிய கொடியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். இதில சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்து கொண்டார்.

இதையடுத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஏற்றுக் கொண்டார்.

விழாவில் வீர, தீர சாதனைகள் புரிந்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. ஆந்திராவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பிரசாத்பாபுவிற்கு, நாட்டின் உயரிய விருதான அசோகசக்ரா விருதை பிரணாப்முகர்ஜி வழங்கினார்.

Tags: ,

Leave a Reply