புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே பிளவு? – கொழும்பின் பிரபல ஆங்கில பத்திரிகைச் செய்தியில் தெரிவிப்பு

any-questionsபுலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே; பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யுத்த நிறைவின் பின்னர் குறித்த தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலக் தமிழர் பேரவைக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அந்த பிரபல ஆங்கில பத்திரிகை தெரிவித்துள்ளது.

உலகின் பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒரே தளத்தில் தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பதற்காகவே உலகத் தமிழர் பேரவை உருவாக்கப்பட்டது எனவும், 14 அமைப்புக்கள் இதில் அங்கம் வகிப்பதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் காலப் போக்கில் உலகத் தமிழர் பேரவை அடிப்படை நோக்கங்களை விட்டு விலகிச் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என அந்தப் பத்திரிகை கூறுகிறது.

உலகத் தமிழர் பேரவையின் ஸ்தாபக நோக்கங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உலகத் தமிழர் பேரவையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த 2010ம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளானமை குறித்து உலகத் தமிழர் பேரவை உரிய கவனம் செலுத்தப்படவில்லை என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளதாக அந்த கொழும்பின் பிரபல பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply