சாதியைச் சாடுவதுபோல் வைரமுத்துவை வறுத்தெடுத்தாரா கமல்?

vairamuthu5நடிகர்களில் நக்கல் பிடித்தவர் கமல் என்ற உண்மை அவரோடு நெருங்கிப்பழகியவர்களுக்கு நன்கு தெரியும்.

அவரது பேச்சில் மறைந்திருக்கும் நக்கல், நய்யாண்டியை அவரது பேச்சை நுணுக்கமாகக் கவனித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

அது சில நேரங்களில் அவரது திரைப்படங்களிலும் தென்படுவது உண்டு.

உதாரணத்துக்கு…
‘நான் கடவுள் இல்லைன்னு சொல்லலையே..இருந்திருந்தால் நல்லாருக்கும்னுதானே சொன்னேன்..!’ – என்ற தசாவதாரம் பட வசனம்.

இப்படியாக நாசூக்காய், நக்கல் அடிக்கிற கமல், பத்மபூஷன் விருது பெற்றதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று…

இந்தியா குடியரசாகி 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடு தன்னிறைவு அடைந்து விட்டதாக கருதுகிறீர்களா?

‘இந்திய குடியரசுத்தலைவரிடம் அல்லது பிரதமரிடம் கேட்க வேண்டிய இந்தக் கேள்வியை முட்டாள்தனமாக ஒரு நடிகனான நம்மிடம் கேட்கிறார்களே…!’ – என்று நினைக்காமல், அக்கேள்விக்கு படு சீரியஸாக பதில் சொன்னார் பத்மபூஷன்.

அவர் சொன்ன பதில் இதுதான்…

”அந்தநிலையை அடைந்துவிட்டதற்கான ஆதாரமும் இருக்கிறது. அடையவில்லை என்பதற்கான அடையாளமும் இருக்கிறது. (குழப்பிட்டாரு பாத்தீங்களா? அதான் கமல்) )முழுமையான வெற்றியை பெறவில்லை. குறிப்பாக, சாதி இன்னும் ஒழியவில்லை. ‘‘சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாடிய பாரதியாரின் பாப்பாக்களுக்கும் கொள்ளுப்பேத்தி வந்து விட்டார்கள். என்றாலும், சாதி ஒழியவில்லை. சாதி ரத்தம் இன்னும் வடிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய குடியரசுக்கு 65 வயது என்று எடுத்து கொள்ளக்கூடாது. 6.5 வயது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.”

என்று சாதியை கடுமையாய் சாடினார் கமல்.

தன்னைச் சுற்றி தன் சாதிக்காரர்களை மட்டுமே வைத்திருப்பவர் என்ற விமர்சனம் கமல் மீதே உண்டு.

அப்படிப்பட்ட கமல் திடீரென சாதி மீது பாய என்ன காரணம்?

அவரோடு சேர்ந்து பத்மபூஷன் விருதுக்கு அறிவிக்கப்பட்ட கவிப்பேரரசு வைரமுத்து மீது உள்ள கடுப்புதான்!

பத்ம விருது பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளம்.

அதில் வைரமுத்துவின் பெயர் வைரமுத்து ராமசாமி தேவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதைப் பார்த்த கமல் நேரடியாக வைரமுத்துவை கண்டிக்க முடியாமல், பேட்டியில் சாதியை திட்டுவது போல் வைரமுத்துவை வறுத்தெடுத்திருக்கிறார் என்பதே பலரது எண்ணம்.

நடிகர்களில் நக்கல் பிடித்தவர் கமல்!

Tags: ,

Leave a Reply