இன அழிப்பு என்ற சொல் வேண்டாம்; இது சட்டச்சிக்கல் என்கிறார் சீ.வி

vikneswaran5இன அழிப்பு என்ற சொற்பதம் திருத்தப்பட்டு இன அழிப்புக்கு ஒப்பானது என்ற சொற்பதத்துடன் உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட பிரேணைகள் வடமாகாண சபையில் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டன.

வடமாகாண சபையின் 5ஆவது அமர்வு நேற்று கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வடமாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்றது.

அதன்போது 15 பிரேரணைகள் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எனினும் உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரால் சபையில் பிரேரிக்கப்பட்ட பிரேரணைகளில் திட்டமிட்ட இன அழிப்பு தொடர்பிரான சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டன.

அவற்றின் அடிப்படையிலேயே அவற்றை இன அழிப்புக்கு ஒப்பானது என்ற சொற்பதத்துடன் பயன்படுத்தலாம் என்றும் இன அழிப்பு என்ற சொற்பதத்தை பயன்படுத்தினால் சட்டச்சிக்கல் உருவாகலாம் என வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

முதமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன அழிப்பு என்பது ஒரு சட்டச் சிக்கலான வார்த்தைப் பிரயோகம். சர்வதேச விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இன அழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்த முடியும்.

எனவே சர்வதேச விசாரணைகளில் இன அழிப்பு தான் என்று முடிவாகும் வரையிலும் இன அழிப்புக்கு ஒப்பானது என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்துவது சிறந்தது என்றார்.

அதனையடுத்து குறித்த உறுப்பினர்களின் பிரேரணைகள் இன அழிப்புக்கு ஒப்பானது என்று திருத்தப்பட்டு திருத்தங்களுடன் பிரேரணைகள் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

Tags: ,

Leave a Reply