அரசிற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள்

protest3இன்று கொழும்பில் எதிர்க்கட்சிகள் சில ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் அரசிற்கு எதிராக நடாத்த உள்ளன.

கொழும்பின் முக்கிய இடங்களில் பேரணிகளை நடாத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு காணாமை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு ஹைட் மைதானத்திலிருந்து ஒரு பேரணியும், கொம்பனித்தெரு மற்றும் மருதானையிலிருந்து இரண்டு பேரணிகளும் ஆரம்பமாகவுள்ளன.

Tags: 

Leave a Reply