வத்திக்கானில் பறக்கவிடப்பட்ட சமாதான புறாக்களை தாக்கிய கடல் பறவையும் காகமும்

pope5பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தலை­மையில் வத்­திக்­கா­னி­லுள்ள சென் பீற்றர்ஸ் சதுக்­கத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஆரா­த­னை­களின் போது சமா­தா­னத்தின் அடை­யா­ள­மாக பறக்­க­வி­டப்­பட்ட இரு வெள்ளைப் புறாக்கள் கடல் பற­வை­யொன்­றாலும் காகம் ஒன்­றாலும் தாக்­கப்­பட்­டுள்­ளன.

மோதல்கள் இடம்­பெற்­று­வரும் உக்­ரேனில் சமா­தானம் நிலை­பெ­று­வ­தற்கு அடை­யா­ள­மாக மேற்­படி சதுக்­கத்தில் அமைந்­தி­ருந்த அபொஸ்­ரோலிக் மாளிகை மாடத்தில் பாப்­ப­ர­சரின் அருகே நின்ற இரு சிறு­வர்­களால் இரு புறாக்கள் பறக்­க­வி­டப்­பட்ட போதே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

pope6உக்­ரேனில் இடம்­பெற்ற பிந்­திய வன்­முறை மோதல்­களில் குறைந்­தது மூவர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில், அந்­நாட்டில் சமா­தானம் ஏற்­ப­டு­வ­தற்­காக பாப்­ப­ரசர் பிரார்த்­த­னை­களை மேற்­கொண்ட சம­யத்­தி­லேயே இந்தப் புறாக்கள் பறக்­க­வி­டப்­பட்­டன.

உக்­ரேனில் வன்­முறை மோதல்கள் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்டு ஆக்­க­பூர்­வ­மான பேச்­சு­வார்த்­தை­களின் மூலம் சமா­தானம் நிலை­பெறச் செய்­யப்­பட வேண்டும் என இதன் போது பாப்­ப­ரசர் அழைப்பு விடுத்தார்.

ரஷ்­யா­வு­ட­னான பொரு­ளா­தார உற­வு­களை வலுப்­ப­டுத்தும் நோக்கில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­து­ட­னான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கை­யொன்றை கைவிட உக்ரேன் ஜனா­தி­பதி விக்டர் யனு­கோவிச் தீர்­மா­னித்­த­தை­ய­டுத்து, அவ­ரது தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அந்நாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Tags: , ,

Leave a Reply