அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு சில அரசியல் கட்சிகள் தம்மை கோரியுள்ளதாகவும், ஆனால், தாம் அதற்கு உடன்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயெ அவர் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தமது எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்றும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பயமான சூழ்நிலை காரணமாக எவரும் இலங்கை தொடர்பாக பேச முன்வருவதில்லை என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
















