போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என உத்தியோகபூர்வமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
பிரிட்டன், கனடா, நோர்வே ஆகிய நாடுகள் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க உள்ளன.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன் ஆயத்தமாகவே அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் இலங்கைக்கு நாளை விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கு வருகை தரும் பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
















