ஸ்நோடன் இரகசியங்கள் அனைத்தையும் பகிரங்கப்படுத்தினால் அமெரிக்க பாதுகாப்புக்கு பேரச்சுறுத்தல்

snowdenஅமெரிக்க உளவுத் துறையின் நிர்வாக இயக்குனர் கிளப்பர்-

ருஷ்யாவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எட்வேட் ஸ்நோடன் (Edward Snowden) தான் அறிந்து கொண்ட விடயங்களை, ஊடகங்களுக்குக் கொடுத்தமை பயங்கரவாதிகளின் தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்கும் செயலின் சக்தியைப் பலம் குன்றச் செய்துள்ளதாக, அமெரிக்க உளவுத் துறையின் நிர்வாக இயக்குனர் கிளப்ப (Clapper) கூறிள்யுளார்.

Snowden அறிந்து வைத்தவைகளில் ஒரு மிகச் சிறிய பகுதி மட்டுமே பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளது என்றும், மிகுதியாக அவரிடம் இருக்கும் ஆவணங்களை உடனடியாக அமெரிக்காவிடம் கையளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சகல ஆவணங்களும் எதிரிகள் கைகளுக்குக் கிடைக்கப்பெறின், மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடுமென்றும், பயங்கரவாதிகள் தங்கள் செய்திப் போக்குவரத்து நுட்பத்தை மாற்றியமைக்கக் கூடுமென்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

பயங்கர வாதிகளின் செய்திப்பரிமாற்றத் தொழில் நுட்பம் அமெரிக்க உளவுத்துறையின் தொழில் நுட்ப்பங்களை அறிந்து செயற்படும் பட்சத்தில் அவர்களை உளவு பார்த்தல் சிரமமாகி, அமெரிக்க, உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமென அமெரிக்கப் பாதுகாப்புச் செயலகம் தெரிவித்துள்ளது.

இதே வேளை நோர்வே நாட்டின் இரு பாராளுமன்ற அங்கத்தவர்களால் Snowden அமைதிக்கான பரிசு பெறும் தகுதிக்கு முன் மொழியப்பட்டுள்ளார்.

உலக அரசியல் மாற்றத்திற்கு வழி செய்து உலகில் அமைதியை நிலை நாட்ட இக் கண்டுபிடிப்புக்கள் வழிசெய்யுமெனவும் அந்த விண்ணப்பத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

பிரேசில் நாடு இவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கவேண்டுமெனக் கோரி இணையத்தளத்தில் நடத்தப்பட்ட கையெழுத்து சேகரிப்பில் 10 லட்சம் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அரசியற் தஞ்சம் கோரி பிரேசில் நாட்டின் ஜனாதிபதியிடம் மிக விரைவில், December இல் மறுக்கப்பட்ட விண்ணப்பம் மறு பரிசீலனைக்காகப் புதிப்பிக்கப்படவுள்ளது.

Tags: ,

Leave a Reply