ஏப்ரலிலும் ‘கோச்சடையான்’ ரிலீஸ் இல்லை: அப்போ எப்போதான் ரிலீஸ்…?

Kochadaiyaan“இன்று தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…” என்று வானிலை அறிக்கை ரமணன் சொல்லுவதைக் கூட நம்பி விடலாம். ஆனால் கோச்சடையான் இந்த தேதியில் ரிலீசாகிவிடும் என்று சொல்வதை மட்டும் இன்றுவரை யாராலும் நம்ப முடியவில்லை.

கடந்த 2013 – ஆம் ஆண்டில் ரஜினியின் பிறந்தநாள், பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் என்று எல்லா விசேஷ நாட்களிலும் கோச்சடையான் கண்டிப்பாக ரிலீசாகும் என்று தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசியில் அது இந்த வருடம் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.

பொங்கலுக்கு வீரமும், ஜில்லாவும் ரிலீசாவதால் அந்தப்படங்களின் வசூல் பாதிக்கப்படக்கூடாது என்று ரஜினி வழி விடச் சொல்ல கோச்சடையான் ஏப்ரலுக்கு தள்ளிப்போனது.

ஆனால் லேட்டஸ்ட்டாக வந்த தகவல்களின் படி வருகிற ஏப்ரல் மாசமும் ‘கோச்சடையான்’ ரிலீஸ் கன்பார்ம் இல்லையாம். தொழில்நுட்ப வேலைகள் இன்னும் கூட ஜவ்வாக……….. இழுத்துக் கொண்டிருப்பதால் இந்த வருட சம்மர் சீஸனுக்கு கோச்சடையான் வராது என்ற வழக்கமான செய்தியை மட்டும் கோச்சடையான் தரப்பில் பதிலாகச் சொல்கிறார்கள்.

அப்போ எப்போ தான் கோச்சடையான் ரிலீசாகும்..?

ரெடியான உடனே ரிலீசாயிடும்…

எப்போ ரெடியாகும்..?

ரிலீஸ் நேரத்துல ரெடியாகும்…

Tags: ,

Leave a Reply