மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசு ஊமையாகவும் செவிடாகவும் ஆகிவிட்டது – சுஷ்மா சுவராஜ்

susmaமீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு செவிடாகிப் போய்விட்டது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும், குஜராத் மீனவர்கள், பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தாலும் தொடர்ந்து கைது செய்யப்படுவது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது. ஏன இந்திய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பாஜக மீனவர் அணி சார்பில் இடம்பெற்ற கடல் தாமiர் போராட்டத்தில், கலந்துகொண்டு பேசுகையில், ‘தமிழக மீனவர்கள் 600 பேர் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான மீனபவ பெண்கள் விதவைகளாக குழந்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு வாழ வழியின்றி தவிப்பவர்களாக இருந்தும், காங்கிரஸ் கட்சி அதனைக் கண்டு கொள்ளவேயில்லை. இதனை நேரடியாக சோனியாவிடமே நான் சொன்னேன். நீங்களும் ஒரு பெண் தானே என்றேன். ஆனால், அதை அவரோ, காங்கிரஸ் அரசோ கண்டுகொள்ளவேயில்லை.

மக்களவையின் ஒவ்வொரு கூட்டத்திலும் மீனவர்கள் பிரச்சினை பற்றி பேசியும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும், மீனவர்களின் நலனில் மத்திய அரசு அக்கறை கொள்ளவேயில்லை. எனவே, மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு ஊமையாகவும், செவிடாகவும் ஆகிவிட்டது’ என சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘பெப்ரவரி 5ம் திகதி நடைபெறும் மக்களவைக் கூட்டத்திலும் மீனவர் பிரச்சினை குறித்து வலியுறுத்துவேன். சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல பாஜக என்பதை மீனவ மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். கோவா மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 5 பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று பாஜகவுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் பாஜகவை சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இதனை எப்போதும் நம்பாதீர்கள். எனவே, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிராந்திய சிந்தனையோடு வாக்களிக்காமல், தேசிய சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

வரவிருக்கும் பாஜக தலைமையிலான அரசு மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரசாக இருக்கும் என்று உறுதியோடு கூறுகிறேன்’ எனத் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply