அமெரிக்காவின் கூற்று; இலங்கை அரசால் நிராகரிப்பு

peries2இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட கருத்துக்களை இலங்கை அரசு அடியோடு நிராகரித்துள்ளது.

அதன்படி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டும் இலங்கையில் மனித உரிமைகள் மிக அதிகமாக மீறப்பட்டுள்ளன என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவில் ராஜாங்க துணை செயலாளரான நிஷா பிஸ்வால் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.அதனையடுத்து அவர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

எனினும் அவரது கருத்துக்களை இலங்கை அரசு அடியோடு நிராகரித்துள்ளது. இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

அமெரிக்காவில் ராஜாங்க துணை செயலாளரான நிஷா பிஸ்வாலின் கருத்துக்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவையாக காணப்படுகின்றது என்றார்.

Tags: ,

Leave a Reply