பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு எதிர்ப்பு

rajiv-mordராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

கருணை மனு மீது முடிவெடுக்க இந்திய அரசு சுமார் 11 ஆண்டுகள் காலம் எடுத்துக்கொண்டதால், அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைக் காரணம் காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், அவர்களுக்காக வழக்கறிஞர்கள் ராம் ஜேத்மலானி மற்றும் யோக்முக் சௌத்ரி ஆகியோர் வாதாடினர்.

மத்திய அரசு தரப்பில் தனது வாதங்களை முன்வைத்த அரசு வழக்குரைஞர் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, மூவரது குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதமானதற்கு காரணங்கள் உள்ளன என்றும், உள்துறை அமைச்சர்கள் மாறுவதால் மனுக்களை பரிசீலிப்பதில் தாமதம் ஆனது என்றும், மூவரும் சித்ரவதைக்கோ, மனவேதனைக்கோ ஆளாகவில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Tags: , ,

Leave a Reply