சிறிலங்கா தொடர்பில் அமெரிக்க – பிரித்தானிய பிரதிநிதிகள் கலந்துரையாடல்

talk-us-ukஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் கலந்துரையாடியுள்ளன.

தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், நேற்று லண்டனில் பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரியை சந்தித்து இது குறித்து உரையாடியுள்ளார்.

இதனையடுத்து தமது சந்திப்பு தொடர்பில் ஸ்வைரி, தனது ருவிற்றர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தாமும் பிஸ்வாலும் சிறிலங்காவின் மனித உரிமைகள் விடயம் மற்றும் ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை என்பவை தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஸ்வைரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஜெனீவாவுக்கு செல்லவுள்ள பிஸ்வால் அங்கு இந்தியா உள்ளிடட நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்து சிறிலங்கா தொடர்பான பிரேரணை குறித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

சிறிலங்காவிற்கு விஜயம் செய்த பிஸ்வால் பல முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் சிறிலங்காவிலிருந்து புறப்படமுன்னர் ஊடகங்களை சந்தித்தபோது, சிறிலங்காவின் நிலைமை திருப்தியில்லாத போதும் பொருளாதார தடைபற்றி அமெரிக்கா சிந்திக்கவில்லையெனவும் ஆயினும் சிறிலங்காவிற்கு எதிராக 3 ஆவது பிரேரணை கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply