வாஜ்பாயின் நடைமுறைகளையே இலங்கை விடயத்தில் பின்பற்றுக; பா.ஜ.கவிடம் கோருகிறார் வைகோ

vaiko2இலங்கை விடயத்தில் வாஜ்பாய் பின்பற்றிய நடைமுறைகளையே பா.ஜ.க பின்பற்ற வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை. கோபாலசாமி வலியுறுத்தியுள்ளார்.

ம.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட வை.கோபாலசாமி, கூட்ட முடிவில் நடத்திய ஊடக
வியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் அரசோ, காங்கிரஸை ஆதரிக்கும் அரசோ அமையக் கூடாது. மத்தியில் ஊழலற்ற அரசு அமையவேண்டும். இலங் கைப் பிரச்சினையை பா.ஜ.க சரியான முறையில் அணுகும். இலங்கை பிரச்சினை யில் வாஜ்பாய் பின்பற்றிய அணுகுமுறைகளையே பின்பற்ற வேண்டும்.

பா.ஜ.க கூட்டணியில் தே.மு. தி.க, பா.ம.க சேர்ந்தால் மகிழ்ச்சியே. பா.ஜ.கவிலிருந்து அழைப்பு விடுத்துள்ளதால் சென்னையில் மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்று வை.கோ மேலும் கூறினார்.

Tags: ,

Leave a Reply