பெப்ரவரி 14ல் ஸ்ரேயாவின் ‘சந்திரா’

chandraஸ்ரேயா நடித்துள்ள படம் சந்திரா. தமிழில் வாய்ப்புகள் இல்லாத ஸ்ரேயா தமிழ், கன்னடத்தில் நடித்து வெளிவர இருக்கும் சந்திரா படத்தை மிகவும் நம்பி இருக்கிறார்.
இந்தப் படத்துக்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் என பல வித்தைகளை கற்று நடித்திருக்கிறார்.

படு கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். மைசூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கிறார். தனது சகல திறமையையும் வெளிப்படுத்தி இருப்பதால் சந்திரா மூலம் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் ஸ்ரேயா.

அவருக்கு ஜோடியாக கன்னட நடிகர் பிரேம்குமார் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர கணேஷ் வெங்கட்ராம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ரூபா அய்யர் டைரக்ட் செய்திருக்கிறார். பெப்ரவரி 14ல் வெளிவரும் படத்தை அபிராமி மெகாமால் நிறுவனம் வெளியிடுகிறது.

Tags: ,

Leave a Reply