இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து மோடிக்கும், வைகோவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

vaiko-modiஇலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவிற்கும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரசிங் மோடிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நரேந்திரசி;ங் மோடியை சந்தித்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினருக்கு ஆதரவு வழங்குவதி;ல்லை என்ற பாரதீய ஜனாத கட்சியின் தீர்மானம் பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக கடமையாற்றிய காலத்தில் இலங்கை இராணுவத்திற்கு ஆதரவளிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகியவற்றின் மாற்று சக்தியாக இம்முறை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் செயற்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply