ஜெனிவா தீர்மானத்தநிராகரிக்கும் இலங்கை; டில்லி கைகொடுக்கும் எனவும் அரசு நம்பிக்கை

UN_General_Assemblyஜெனிவாக் கூட்டத்தொடரில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் இலங்கை அரசு, தமது முயற்சி கைகூடாமல் தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதை நிராகரிப்பதற்கு முடிவெடுத்துள்ளது. இதனை நேற்று உதயனிடம் உறுதிப்படுத்திய வெளி விவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா, ஜெனிவாவில் இலங்கை சார்புப் போக்கை இந்தியா இம்முறை கடைப்பிடிக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதி ராக முன் வைக்கப்படும் பிரேரணை நிறைவேற்றப்படும் பட்சத்தில், அந்தத் தீர்மா னத்தை ஏற்று அதில் முன்வைக்கப்பட்டுள்ள சரத்துகளை – சிபாரிசுகளை நடைமுறைபடுத்துவதற்கு இம்முறை அரசு இணங்குமா என்றும் ஜெனிவாப் பிரேரணை விவகாரத்தில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை இம்முறை எடுக்கும் என்றும் பிரதியமைச்சரிடம் “உதயன்’ வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையின் நல்லிணக்கக்குழுவின் பரிந்துரைகளை ஐ.நா. மனித உரி மைகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. அவற்றை அமுல்படுத்தி வருகின்றது. இதுவரை யில் 85 சதவீதமானவை நிறை வேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, ஜெனிவாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கை இருக்கை யில் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானத்தை அரசு இம்முறையும் நிராகரிக்கும். அத்துடன், அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா சிறந்த முடிவை எடுக்கும் என அரசு நம்புகிறது. ஜெனிவாவில் அதன் சிறந்த பங்களிப்பு கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.

Tags: , ,

Leave a Reply