பெரும்பான்மைச் சமூகம் புனானையில் குடியேற்றம்; திட்டமிட்ட நடவடிக்கை என்கிறது கூட்டமைப்பு

tnalogo2மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லையான புனானையில் மீள்குடியேற்றத்துக்கு புறம்பாக வெளி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மையின குடும்பங்களும் திட்டமிட்டுக் குடியேற்றப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அங்குள்ள இராணுவமும் பெளத்தபிக்குவும் வெளிமாவட்டத்தை சேர்ந்த சிங்கள குடும் பங்களின் குடியேற்றத்துக்கு பின்புலமாக இருக்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவிக்கிறார்.

புனானையில் ஏற்கெனவே வாழ்ந்துவந்த தமிழ்க் குடும்பங்களை மீள்குடியேற்றுவதை விடுத்து, சிங்கள மக்களை அங்கு புதிதாகக் குடியேற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றம்சாட்டியுள்ளார்.

சொந்தக் கிராமத்துக்குத் திரும்பினாலும் தமது காணிகளில் இராணுவ முகாம் அமைந்துள்ளதால், சொந்தக் காணியில் குடியிருக்கும் வாய்ப்பு தமக்கு கிடைக்க வில்லை என்று புனானைப் பகுதி தமிழ்க் குடும்பங்கள் கவலை தெரிவித்தன.

மீள்குடியேற்றத்துக்கு தெரிவான குடும்பங்களுக்கு தற்போது காணிகள் அடையாளமி டப்பட்டு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டாலும், இராணுவம் மற்றும் பெளத்த பிக்குகள் தலையீடு காரணமாக பொருத்தமான காணிகளை வழங்குவதில் சிங்களக் குடும்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.

இதேவேளை இராணுவத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ஏன் இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பது குறித்து இராணுவம் ஆராயும் என்று அதன் பேச்சாளர் பிரிகே டியர்ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply