தமிழ்,தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக கோலோச்சுபவர் காஜல் அகர்வால்.
தமிழில் சூர்யா, கார்த்தி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் தான் காஜலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரை விட வயதான காஜலுக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் ஏற்பாடு நடந்த போது காஜல் மறுத்து விட்டார்.
அதன் பின்னணியை விசாரித்தபோது தான் அவர் ஆந்திராவிலுள்ள பிரபல தொழிலதிபர் ஒருவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால் தொழிலதிபர் வீட்டில் காஜல் ஒரு நடிகை என்பதால் அவரை மருமகளாக ஏற்க மறுக்கிறார்களாம். மேலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறதாம்.
இதனால் பயந்து போன அந்த தொழிலதிபர் நாம் ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என்று காஜலை விடாமல் துரத்தி வருகிறார்.
அதற்கு காஜலோ கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனை அடங்கியதும் காதும் காதும் வைத்தாற் போல நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
















