இஸ்லாம் மதத்துக்கு மாறியதற்கு இயக்குநர் அமீர்தான் காரணமா? – மனம் திறந்து பேசுகிறார் யுவன்சங்கர்ராஜா என்கிற அப்துல்லாஹ்

Yuvan-shankar-rajaஇளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர்ராஜா, இஸ்லாம் மதத்தின் மீது பற்று கொண்டு, முஸ்லிமாக மாறியது பற்றி சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டோம்.

முஸ்லிமாக மாறியதை ரகசியமாக வைத்திருந்த யுவன்சங்கர்ராஜாவுக்கு, நாம் வெளியிட்ட செய்தியின் காரணமாக அவர் முஸ்லிமாக மாறியதை ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

எனவே, ‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறியது உண்மை. அதற்காக பெருமைப்படுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்!’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்ல, நாம் வெளியிட்ட செய்தியின் தொடர்ச்சியாக, யுவன்சங்கர்ராஜா மதம் மாறியது குறித்த செய்திகள் அனைத்து முன்னணி ஊடகங்களிலும் செய்தியானது.

இந்நிலையில், இஸ்லாம் மதத்துக்கு மாறியது தொடர்பாக மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் யுவன்சங்கர்ராஜா.

குறிப்பாக, இயக்குநர் அமீர் பற்றி..! அவர்தான் யுவனை இஸ்லாம் மதத்துக்கு அழைத்துச் சென்றார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் யுவன்…

”இஸ்லாம் மதத்துக்கு வரும்படி என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, வற்புறத்தவில்லை. எனக்குள் என் ஆன்மாவுக்குள் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே நான் முஸ்லிமாக மாறினேன்.”

என்கிற யுவன் பற்றி இன்னொரு செய்தியும் அடிபடுகிறது.

திலீப்குமாராக இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகுதான் உலகப்புகழ் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரைப் போல் வர வேண்டும் என்பதால் இஸ்லாமியராக மாறிவிட்டார் யுவன் என்பதே அந்த செய்தி.

”அப்படிப்பட்ட அவசியம் எனக்கு இல்லை. என் அனுபவத்தில் நான் எடுத்த முடிவு இது”

– என்று தன்னை ஏ.ஆர்.ரஹ்மான் உடன் ஒப்பிட்ட செய்தியையும் மறுத்திருக்கிறார்.

அதோடு,இஸ்லாம் மதத்துக்கு மாற அவர் முடிவு செய்ததும், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் பேசி இருக்கிறார் யுவன்சங்கர்ராஜா…

”நான் மதம் மாற இருக்கிறேன் என்பதை என் அப்பாவிடம் சொல்ல வேண்டியது என் கடமை. எனவே அவரிடம் சொன்னேன். அதைக் கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்தார். பிறகு என்னை புரிந்து கொண்டார். என் முடிவை ஏற்றுக்கொண்டார். பிறகு பவதாரணி, கார்த்திக்ராஜா இருவரிடமும் சொன்னேன். அவர்களும் என்னை புரிந்து கொண்டார்கள். ஸோ..நான் இஸ்லாம் மதத்துக்கு மாறியதால் என் குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை.”

இஸ்லாம் மதத்துக்கு மாறியதும் தன் பெயரை அப்துல்லா என்று யுவன்சங்கர்ராஜா மாற்றிக் கொண்டுவிட்டதாக தகவல்.

யுவன்சங்கர்ராஜா என்ற பெயரில் புகழ்பெற்றுவிட்ட பிறகு இப்போது அந்தப்பெயரை மாற்றுவாரா?

”இது பற்றி விரைவில் சொல்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் யுவன்.

Tags: , ,

Leave a Reply