தென் ஆப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா . நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் திகதி ஜோகனஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார்.
மண்டேலாவுக்கு 3 மனைவிகள்.1944–ம் ஆண்டு முதல் திருமணம். ஈவிலின் மேசேயை மணந்தார். இந்த தம்பதியருக்கு4 குழந்தைகள்.1958–ம் ஆண்டு இருவரும் விவாக ரத்து செய்து கொண்டனர். 1958–ம் ஆண்டு வின்னியை மணந்தார். 1998–ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள். பின்னர் தனது 80–வது பிறந்த நாளில் மொசாம்பிகா முன்னாள் அதிபரின் விதவை மனைவி கிரேகா மேச்சலை மண்டேலா 3–வது திருணம் செய்தார்.
மண்டேலா மரணத்துக்கு முன்பே அவர் தனது சொத்துக்களை குடும்பத்தினருக்கும், கட்சிக்கும் உயில் எழுதி வைத்து இருந்தார். அதன்படி அவருக்கு ரூ.25 கோடி சொத்து உள்ளது. அதில் பாதி அளவு அதாவது ரூ.12 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை மனைவி கிரகா மண்டேலா வுக்கு வழங்கியுள்ளார். மொசாம்பிக்கில் உள்ள 4 சொத்துகள், கார்கள் மற்றும் நகைகளும் அவற்றில் அடங்கும்.
தான் எழுதிய புத்தகங்களின் ராயல்டி தொகை மற்றும் ஜோகன்ஸ்பர்க், கேப்டவுன், குயுனா மற்றும் மதாதா ஆகிய இடங்களில் உள்ள வீடுகளை தனது குடும்ப அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.
தனது குழந்தைகளுக்கு தலா ரூ.2 கோடியும், மரணம் அடைந்த தனது மகன் மகாதோவின் 4 குழந்தைகளுக்கு தலா ரூ.2 கோடியும் வழங்கியுள்ளார். அவை தவிர தனது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு பல திட்டங்களில் இருந்து கிடைக்கும் ராயல்டி தொகையில் 10 முதல் 30 சதவீதம் வரை வழங்கும் படியும் அறிவுறுத்தியுள்ளார்.
தனது உதவியாளர்கள், பள்ளிகள் மற்றும் பல்கலை கழகங்களுக்கு நிதி உதவி வழங்கும் படியும் உயிலில் எழுதியுள்ளார். அதே நேரம் தன்னை விவாகரத்து செய்த முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவுக்கு சொத்து எதுவும் அவர் வழங்கவில்லை.
இந்த நிலையில் மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலா தங்களுக்கும் தந்தை என்று 2 பெண்கள் கூறி உள்ளனர். இது தென்னாப்பிரிகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒனிகா மொதாவோ (வயது 63) மற்றும் மேப்கோ போபுளூ (60) இருவரும் மண்டேலா குடும்ப வக்கீலான மைக்கல் கட்சை தொடர்பு கொண்டு உள்ளனர்.இதை கட்ஸ் உறுதி படுத்தி உள்ளார். மோதாவும் பவுலும் தன்னை தொடர்பு கொண்டதாகவும் அவர்கள் மண்டேலா தங்களது தந்தை என்றும் கூறி உள்ளனர்.
மோதவா டி.என்.ஏ பரிசோதனை மூலம் அவரது மகள் என்பதை நிரூபிக்க தான் தாயராக இருப் பதாக கூறியுள்ளார். அவரது சொத்து தனக்கு தேவையில்லை என்றும், தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு இந்த விவரம் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த உரிமை கோருவதாக தெரிவித்துள்ளார்.
மண்டேலா ஈவிலின் மேசேயை என்பவரை முதலில் திருமணம் செய்தார். அதற்கு முன்பு வேறு பெண்களுடன் ஏற்பட்ட தொடர்ப்பு மூலம் இவர்கள் பிறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
















