இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் குற்றங்கள் தொடர்பிலும் நாட்டின் தற்போதைய மனிதஉரிமை நிலைமைகள் குறித்தும் நம்பகமான சுயாதீன விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனை உள்ளடக்கி இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலில் விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்படும் நகர்வுகளுக்கு அனுசரணை வழங்குவது என ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
பிரசெஸ்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய வெளிவிவகார சபையின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஐ.நா. மனித உரிமைகள்சபையில் மார்ச் மாத கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ள விட யங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன் போது உலக நாடுகள் அனைத் திலும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை ஐ.நாவுடன் இணைந்து தாம் ஊக்கப் படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
















