இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

european-union-flagஇலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பிலும் நாட்டின் தற்போதைய மனிதஉரிமை நிலைமைகள் குறித்தும் நம்பகமான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலில் விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்படும் நகர்வுகளுக்கு அனுசரணை வழங்குவது என ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

பிரசெஸ்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய வெளிவிவகார சபையின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மார்ச் மாத கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதன் போது உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை ஐ.நாவுடன் இணைந்து தாம் ஊக்கப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Tags: , , ,

Leave a Reply