காணி பறிப்பு விவகாரமும் ஜெனிவாப் பிரேரணையில்; கூட்டமைப்பு நம்பிக்கை

TNA-SLMC வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்படும் காணி அபகரிப்புக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையினூடாக இம்முறை சர்வதேச சமூகம் காட்டமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிட்டனில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையில், தமிழர் தாயகத் தில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்பு குறித்த வரைவுகள் இம் முறை உள்ளடக்கப்படும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 31, பெப்ரவரி 1, 2 ஆகிய திகதிகளில் பிரிட்டன் சர்வக்கட்சி நாடாளுமன்றக் குழு, பிரிட்டன் தமிழர் பேரவை ஆகியன இணைந்து, வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச மாநாட்டை நடத்தியிருந்தன.

இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்குச்சென்ற கூட்டமைப் பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் நேற்று முன் தினம் நாடு திரும்பினார்.

இந்நிலையில் அங்கு நடை பெற்ற மாநாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டு இறுதி போருக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் இடங்களை இராணுவத்தினர் அரசின் அனுமதியுடன் திட்டமிட்ட ஆக்கிரமித்துவருகின்றனர்.

இது இன அழிப்பை ஒத்த நடவடிக்கையாகும். தமி ழினத்தை அழிக்கும் ஒரு முயற்சியாகவே இந்த நில ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது என்று லண்டனில் இடம் பெற்ற நில ஆக்கிரமிப்பு தொடர்பான மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக் கூறியது.

மாநாட்டில் கலந்துகொண்டு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர். இது தொடர் பில் ஐ.நா. மனித உரிமை சபையினூடாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். எனவே, ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரும் பிரேரணையில் நில ஆக்கிரமிப்பு குறித்த சரத்துகள் இருக்கும் என நம்புகின்றோம்- என்றார்.

Tags: , , ,

Leave a Reply