22முறை; எச்சங்கள் தொகை 61 ஆக அதிகரிப்பு

Mannar-deads1மன்னார் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் இரண்டு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 22 ஆவது தடவையாக நேற்று தோண்டப்பட்ட போதே மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன தலைமையில் நேற்று காலை 8.30 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை தோண்டப்பட்டது. அதன் போதே 2 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டது.

இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களின் தொகை 61 ஆக அதிகரித்துள்ளது. மீட்கப்பட்ட 2 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் 3 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டடு மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் மீண்டும் இன்று வியாழக்கிழமையும் 23 வது தடவையாக மனித புதைகுழி மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply